Breaking News

பப்ஜி விளையாடிய +2 மாணவன் மாரடைப்பால் மரணம்

      கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்கள் பள்ளி இல்லாததால் அதிக நேரம் ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல விளையாட்டுகளில் மூழ்கி அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இதனால் அவர்களுக்கு உடல் மன ரீதியான பிரச்சினைகள் வரக்கூடும் என்று மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
           ஆந்திர மாநிலத்தில் பப்ஜி நீண்ட நேரமாக விளையாடியதால் பிளஸ் டூ மாணவன் மாரடைப்பால் மரணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

        ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த முரளி என்ற பிளஸ் டூ மாணவன் பள்ளி இல்லாததால் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து பப்ஜி விளையாண்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அவனது அம்மாவின் அருகில் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளான்.
       பயந்துபோன அவனது பெற்றோர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் மருத்துவர்கள் அவனது உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ரெட்ட பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

     குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பப்ஜி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அவனது பெற்றோர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments